ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!! (PART-1)

ஜனவரி 18, 2008 by முஸ்லிம்
ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!. (PART-1)

இவ்வுலகில் சமத்துவ சரித்திரம் படைத்த சத்திய மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம் என்னும் இறையளித்த திருநெறியை இறுதியாக கட்டமைக்க வந்தவர் அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவர். அன்பு, அமைதி, கனிவு பணிவு, மன்னித்தல் போன்ற அழகிய குணங்களின் தாயகமாம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை மாற்று கொள்கையுடைய அறிஞர்களும் வியந்து பாராட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் குறுமதி படைத்த சில அரக்கர்கள் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் தங்கள் பொய் கற்பனைகள் மூலம் தூற்றுவதையே முழுநேரப் பணியாக கருதி களம் கண்டுள்ளனர். அத்தகைய புரட்டுகளைக் களையும் முகமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதன் உண்மைகளை அவ்வப்போது நாம் விளக்கி வருகிறோம். அவ்வரிசையில் மற்றொரு அவதூறு

//முகம்மதுவைத் திட்டினால், கர்ப்பிணிப்பெண் என்றும் பார்க்காமல் வயிற்றில் குத்திக் கொன்று விட்டு வா, உன் மீது எந்த குற்றமும் சாத்தாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முகம்மது சொல்கிறான். இப்படி போதிக்கும் மதத்துக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இந்த முகம்மதுவின் வழியில் ஜிகாதிகள், அப்பாவிகளை, பொதுமக்களை, ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் முதியவரையும் “இஸ்லாமிய முறையில்” கழுத்தை அறுத்து கொல்வது…..//

இவ்வாறு கதையளந்துள்ளனர். என்ன சிரிப்பு வருகிறதா? ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள்….. (Click Here to Continue)

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை

இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்

அக்டோபர் 8, 2007 by முஸ்லிம்

WWW.IIPONLINE.ORG
இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்

இவ்வுலக மாந்தர்களின் இனம்-நிறம்-மொழி வேற்றுமைகளை வேறோடும் வேறடிமண்ணோடும் வீழ்த்தி, மனிதர்கள் அனைவரும் சமமே என்ற சமத்துவம் கண்ட சத்திய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கிட முற்படும் அனைவருக்கும் பூரணசந்திரன் போல இவ்வுண்மை விளங்கும். ஆனால் நமது தமிழ் இணையத்திலோ சில புள்ளுரிவிகளால் இஸ்லாத்தில் ஜாதிய கட்டமைப்பு உள்ளதாக கதையளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் திரிபுவாதம் செய்வதற்கு ஒரேயொரு பின்னனிதான் உள்ளது. அது காலங்காலமாக இந்துமக்களை தன் வர்ணாசிரம கொடிய சிந்தனையால் பலஜாதிகளாகப் பரித்து கூறுபோட்டு பந்தாடிக்கொண்டிருக்கும் பார்ப்பன வெறியும், தான்மட்டுமே உயர்ந்தவன் என்ற இருமாப்பும்தான் காரணம்.

தன் மூதாதையர் ஏற்படுத்திய அந்த கொடிய ஜாதிய ஏற்றத்தாழ்வில் சுகம் காண்ட இப்பார்ப்பன துவேஷக்கும்பல், தன் அப்பன் பாட்டன் வகுத்த ஜாதி கோரசிந்தனையில் சிக்குண்டுள்ள காரணத்தால் இஸ்லாத்திலும் ஜாதிகள் உண்டு, இன வேற்றுமை உள்ளது என்று உளறிக் கொட்டியுள்ளது. அந்த அறிவுகெட்ட ஜென்மங்களின் இத்தகைய குடிபோதை உளரல்களுக் கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமான நிலையில் முஸ்லீம்களாகிய நம்மை அல்லாஹ் ஒருபோதும் வைக்கவில்லை.

இருப்பினும் தமிழ் இணையத்தில் இவர்கள் ஏற்படுத்திவிட்ட களங்கத்தை முஸ்லிம்களாகிய நாம் நீக்கி, தமிழ் இணையத்தை சுத்தப்படுத்திடக் கடமைப்பட்டுள்ளோம். உலகில் இனம்-நிறம்-மொழி வேற்றுமைகளை ஒழித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதற்கு பல்லாயிரக்கனக்கான சான்றுகள் இருப்பினும் அதில் சிறு பகுதியை மட்டும் தற்போதைக்கு இணைய வாசர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.

நமதுநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் உயரவில்லை. இன்னும் தீண்டத்தகாத மக்களாக வேண்டாத இனமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலை இன்றுவரை நடைபெற்று கொண்டுருக்கின்றது. உதாரணமாக பாபு ஜகஜீவன்ராம் அரிஜன மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது காசியில் டாக்டர் சம்பூரணானந்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார். விடுவார்களா? இந்த மேல்ஜாதியினர் இந்த செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலை தீட்டுபட்டுவிட்டதென்று ஊர் உலகத்துக்கு பிரகடனப்படுத்தி கங்கைக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து சிலையைக் கழுவி சுத்தப்படுத்தியதை இந்த நாடு அவ்வளவு சீக்கீரத்தில் மறந்துவிடுமா என்ன? இதுபோல் தாழ்த்தப்பட்ட ஒரு நீதிபதி பதவிக்காலம் முடிந்தபிறகு அங்கே வேறொரு மேல்ஜாதிகாரர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.முதல்நாளில் வந்து இவ்வாறு கூறினார், இந்த நாற்காலியில் தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்ததால் இது தீட்டுப்பட்டுவிட்டது ஆகவே இதை மாற்றுங்கள் என்று. நீதியை காப்பாற்றுகின்ற நீதிபதிக்கே இந்த கொடுமையென்றால் மற்றவர்களுக்கு?

இன்னொரு சம்பவம். திருச்சி பக்கத்திலே ஒரு கிராமம். அங்கே மேல்ஜாதி இந்து ஒருவருடைய தோட்டத்திலுள்ள கிணற்றில் அரிஜன சிறுவர்கள் குளித்து வந்தனர். இதைப் பார்த்த தோட்ட உரிமையாளர் கிணற்றில் கீழ்ஜாதி பையன்கள் குளிப்பதா என்று குமுறினார். அவரது கிணற்று தண்ணீரே தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி குமுறினார். ஒருநாள் அந்த கிணற்றிலே சிறுவர்களுடைய பிணங்கள் மிதந்தன. என்ன காரணம்? கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. என்ன கொடுமை!

இப்படிப்பட்ட இனவேற்றுமைகள் நம் இந்திய திருநாட்டில் மட்டுமல்ல உலக முழுவதும் பரவிகிடக்கின்றன, அதையெல்லாம் விவரித்தால் பக்கங்கள் போதாது. மேற்குலகம் நிறத்தாலும் இனத்தாலும் ஆண்டாண்டு காலம் அடிமைபட்டு இருந்ததை அந்த வேதாந்தம் பேசும் உலகம் வேடிக்கை பார்த்துகொண்டுதான் இருந்தது. யூதர்கள் இதே அடிப்படையில்தான் இஸ்ரவேலர்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பினங்களாக கருதினர். தங்கள் மார்க்க சட்டதிட்டங்களில் கூட இஸ்ரவேலரல்லாத மக்களின் உரிமைகளையும், அந்தஸ்த்தையும் தாழ்த்தி வைத்தனர். கறுப்பர். வெள்ளையர் எனும் பாகுபாட்டின் காரணமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இன வேற்றுமைகள் காரணமாக தினம் தினம் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை இந்த நூற்றாண்டிலும் பார்த்து படித்து வருகிறோம். ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பெருநிலத்தில் புகுந்து செவ்விந்தியர் மீது தம் ஆதிக்கத்தை கொடுமை புரிந்த நெடிய வரலாறுகள் உண்டு.மால்கம்எக்ஸ் என்பவர் நிறவேற்றுமைக்கெதிராக சத்தியபுரட்சி செய்து சத்தியத்தைக்கொண்டு நிறவேற்றுமையை நீர்மூலமாக்கினார்,விட்டார்களா நிறவெறியர்கள் மேடையில் அவர் பேசிகொண்டு இருக்கும்பொழுது பாடையில் ஏற்றிவிட்டார்கள்(சுட்டுக்கொன்றனர்) அந்த படுபாவிகள். உதாரணத்துக்காகத் தான் மேலேயுள்ள சம்பவங்கள்,ஆனால் வரலாற்றுப்பாதையில் புதைக்கப்பட்ட வடுக்கள் ஏராளம்.

இப்படி மனிதன் தனக்குள்ளாகவே வேறுபட்டுகிடக்கும் போதுதான் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளி அரேபியாவில் படிப்பறிவுயில்லாத சமூகத்தில் தோன்றியது.அந்த நேரத்தில் அம்மக்கள் நிறத்தாலும் குலத்தாலும் ஆண்டான்-அடிமை என்ற வேற்றுமையிலும் அடிமைபட்டுக் கிடந்தனர்.ஆனால் இஸ்லாம் தோன்றினப்பிறகு அனைத்து வேற்றுமைகளையும் அடித்தொழித்து அவர்களை உற்ற சகோதரர்களாக்கியது, ஒரே சமூகமாக்கியது. ஆகையால் தான் அப்போது பாதிக்குமேற்பட்ட உலகத்தையே ஆட்சி செய்கின்ற நிலைமையும் ஏற்பட்டது.இதைப்பார்த்து ரோமப்பேரரசு போன்ற வல்லரசுகள் நடுநடுங்கியது என்று வரலாறு நமக்கு இப்போது தெரிவிக்கின்றன.

எப்படி இப்படிப்பட்ட காட்டுமிரான்டித்தனமான மக்களை சகோதரர்களாக்கி ஒரே சமூகமாக்கியது.வேறெதுவும் இல்லை கீழேயுள்ள இறைவனின் குர்ஆனுடைய திருவசனங்களும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய போதனைகளும் மட்டும் தான்.

திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது, ‘மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் – பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்’ – என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது. ‘உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.’நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்’ (44:13)

இறைவன் எல்லா மனிதர்களையும் அழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான். உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது.இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும். சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிலிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது. ஒரு பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமற்றவர்களாகவும்தான் இருக்க முடிந்தது.ஒரு இனம் மற்றோர் இனத்தைவிட தன்னை உயர்ந்ததாக கருதி வேற்றுமை பாராட்ட வேண்டுமென்பதில்லை. மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம், நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரலி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரலி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)

பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள். இப்படி அவர்களுக்கிடையில் தவறுகள் தெரியாமல் நடந்திருந்தும் அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.

மற்றொரு சம்பவத்தில், ஒருமுறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் ‘ஓ’ அன்சாரிகளே! எனக்கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் ‘ஓ’ முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் “ஏன் ஜாஹிலியத்தின் (அறியாமையின்) அழைப்புகளை விடுக்கிறீர்கள்!” எனக்கேட்டார்கள்.”அவர்களுக்கிடையில் என்ன தகராறு?” என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ‘இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம். இதில் எந்தளவிற்கு நபியவர்கள் மனிதர்களுக்குள் நிறவெறியே இருக்குக்கூடாது என்பதை அறியலாம். இன்றுயிருக்கின்ற நவீன உலகத்தில் அதீநவீன சட்டங்கள் இருந்தும் மனிதன் பல்வேறு இனவேறுபாட்டால் மூழ்கியிருக்கின்ற நிலையில் 1400ஆண்டுகளுக்கு முன்பு இருண்டகாலம் என்று அழைக்கப்படுகின்ற அச்சமூகத்தில் இப்படிப்பட்ட கருத்துக்கள் எடுத்துவைத்து ஒரு உன்னதமான சமூதாயத்தை உருவாக்கிக்காட்டினார்கள் என்பதை இப்பொழுதும் உலகம் மூக்குமேல் விரல்வைத்து பார்க்கும் பொழுது பெரும்வியப்பு தான் ஏற்படுகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.

இன்னொருமுறை சொன்னார்கள், நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.

அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.’ இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.’

‘அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின்பாலும் செயல்களின்பாலும் தான் நோட்டமிடுகிறான்.’(முஸ்லிம்- இப்னுமாஜா)

இந்த போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்களாக மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறைவிசுவாசிகளை கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. இச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை, குலம், கோத்திரம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது. ஆகவே தான் ஆண்டுக்கொருமுறை உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவத்தை போற்றும்வண்ணம் ஹஜ் என்கின்ற புனித கடமையை நிறைவெற்ற மக்காவில் எந்தவித வேற்றுமையில்லாமல் ஒன்றுகூடுகின்றனர். இதில் சிந்திப்போறுக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றது.

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.

இஸ்லாத்தைப் பற்றி கவிதை வடிவில் சரோஜினி நாயுடு இவ்வாறு கூறுகிறார், அரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது. ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?-

இஸ்லாத்தைப் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார், ‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’

அறைக்குள் இருந்தே அகிலத்தையே உன்கையில் அடக்கும் வசதியிருந்தும்

அணு ஆராய்ச்சி மாறி நிலவிலும் வலம் வரலாம் என்கின்ற வசதி வந்தும்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்களை அடைந்துயிருந்தும்

கடல்மேல் பயணம் மாறி கடல் கீழும் பயணம் பாயலாம் என்ற நிலைக்கு வந்தும்

ஆடு மேய்கின்றவனும் அலைபேசியை அடைந்துயிருக்கின்ற அதிசியம் நிகழ்ந்தும்

காரு போகாத ஊருகளுக்கெல்லாம் கணினி சென்றுவிட்ட கலியுலகை அடைந்திருந்தும்

மனிதன் மட்டும் ஏன் இன்னும் வேற்றுமையில் மூழ்கியிருக்கிறான்?

ஆகாயத்தையே ஆராய்ச்சி செய்கிறாய் பிறகேன் இன்னும் அறியாமையில் இருக்கிறாய்?

நாமெல்லாம் ஒரே தாய் தந்தையருக்கு பிறந்தோம் என்று உமக்கு தெறியாதா?

பிறகு ஏன் பிரிவினை? நன்றாக உணர்ந்து கொள் உன்னை!

இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம் அழைக்கிறது உன்னை !!

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி !!!

இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்

அக்டோபர் 2, 2007 by முஸ்லிம்

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை

WWW.IIPONLINE.ORG

.

இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்

7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவர். அது க்வின் சி ஹங்க் என்ற சீன மன்னரால் கட்டி முடிக்கப்பட்ட 2000 வருடங்கள் பழமை வாய்ந்த உலக அதிசயமாம் சீனப் பெருஞ்சுவர். இப்பெருஞ்சுவர் க்வின், ஹன், மற்றும் மிங் பழங்குடியினரின் பெருமையை இவ்வுலகிற்கு இன்றும் பறைசாற்றுகிறது.

இவ்வுலகிற்கு பல அதிசயங்களோடு காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற எகிப்திய பிரமிடுகளுக்கு 4000 வருடங்களாக வரலாறு உண்டு. 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட கொடுங்கோலன் பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் காலத்தில் கட்டப்பட்டதற்கான சான்றுகளும் சில பிரம்மாண்ட பிரமிடுகளில் காணக்கிடைக்கின்றன.

தாஸ்மஹால், குத்புமினார் என்று முகலாய மன்னர்கள் தங்களின் சிற்பக் கலையை இந்திய மண்ணில் படைத்தனர். இவ்வாறு பல வரலாற்று நிரூபனங்களோடு இச்சின்னங்கள் அதிசயங்களாக இன்றும் நம் கண்முன் காட்சியளிக்கின்றன. வரலாற்று சின்னங்கள் என்றால் அதற்கென்று வரலாறு இருக்க வேண்டும். வரலாறு இல்லாத ஒரு வரலாற்று சின்னத்தைப் பற்றி அறிய வேண்டுமா? இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

அது என்ன சேது சமுத்திரத் திட்டம்?

சேது சமுத்திரத்திட்டம் – இது இந்தியத் திருநாட்டின் கடல்வணிக மற்றும் கடற்பாதுகாப்பு துறைகளுக்கு ஒரு மயில்கல்லாக அமைப்பெறும் திட்டம். இது தமிழக மக்களின் ஒரு நூற்றாண்டு கால கனவு என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, சேது சமுத்திரத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் இந்த கால்வாய் இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காலவிரிகுடா வழியே செல்லும் கப்பல் போக்குவரத்தின் தவிற்கமுடியா ஒரு கனவாயாக அமைந்துவிடும். இவ்விரு கடல்களிடையேயான பயணதூரம் 20 மணி நேரமளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது. இவ்வணிக போக்குவரத்தால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 கோடி அளவிற்கு தமிழகம் வருவாய் ஈட்டும். அதுமட்டுமல்ல அரபிக் கடலில் அமைந்திருக்கும் நம் இந்திய கப்பற்படையின் தளத்திலிருந்து விசாகப்பட்டினத்தின் தளத்தை இந்திய கடல் எல்லையிலிருந்தே நமது இராணுவம் கண்கானிக்கும் வசதியைப் பெறும். இலங்கையை சுற்றிச் செல்வதால் ஏற்படும் கால விரையமும் பொருட்செலவும் இல்லாமல் ஆக்கப்படும். அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கால விரிகுடா ஆகிய முக்கடலின் அமைந்திருக்கும். நமது கடற்படை மற்றும் இராணுவத்தின் பலம் பெறுமளவு அதிகரிக்கும். இப்படி சேது சமுத்திரத்திட்டத்தால் விளையும் பயன்களை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இத்தகைய பலன்தரும் திட்டம் நிறைவேறுவதற்கு நமது அரசு செய்யவேண்டிய ஒரே வேலை இதுதான். – அது கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மணற்மேடுகள் மற்றும் சுண்ணம்புப் பாறைகள் நிறைந்திருக்கும் சேது சமுத்திரப் பகுதியை சற்று ஆழமும் அகலமும் படுத்திடவேண்டும். இதுவே சேது சமுத்திரத்திட்டம் ஆகும்.

விடுவார்களா சங்பரிவாரத்தினர்?இவர்கள் ஆட்சியில் நிறைவேறாத மாபெரும் இத்திட்டத்தை மற்றொருவர் செயல்படுத்தி வெற்றி காண்பதா என்ற காழ்ப்புணர்ச்சியில், இத்திட்டத்தை முடக்குவதற்காக ராமர் என்கிறார்கள், ராமர் கட்டிய பாலம் என்கிறார்கள். நமது நாட்டின் அகழ்வாராய்சித்துறை முதல் அமெரிக்கவின் நாஸா அறிவியல் வல்லுனர்கள் வரை அதை சுண்ணம்புப்பாறை என்றுதானே ஆய்வு செய்து சொல்கிறார்கள். ஏன் இந்த பாறையை வைத்தும் அரசியல் பண்ணுகிறீர்கள் என்று எவரும் வினவிடக் கூடாது. மீறி எவரும் கேள்வி கேட்டால் உங்கள் தலை வெட்டப்படும், உங்கள் நாக்கோடு சேர்த்துத்தான். இக்கொலையை செய்யும் மாவீரனுக்கு பம்பர் பரிசு வேறு.

வரலாற்று உண்மைகளை சங்பரிவார்கள் என்றும் மதித்ததில்லை

அன்று 1992 டிசம்பர் 5ம் தேதிவரை அயோத்தியில் இருந்த 400 ஆண்டுகால வரலாற்று சின்னமாம் பாபரி பள்ளிவாயில் ராம ஜென்மபூமி என்று கதையளக்கப்பட்டு பின்னர் ராமர் பிறந்த இடமாக மாற்றி, இறுதியில் ராமர் கோயில் அங்கே இருந்தது என்று மாற்றப்பட்டு இந்துத்துவ தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டது. வரலாற்று சின்னங்களை உருவாக்குவது நல்லுலோர்களின் வேலை. அதை அழிப்பதுதான் இந்துத்துவ சங்பரிவார ஆர்எஸ்எஸ் கொலை வெறியர்களின் வேலை. அன்று – இந்திய வரலாற்று சின்னமாம் பாபர் மசூதியை இடிப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய அரசியல். இன்று – சுண்ணாம்புப் பாறையை இடிக்கவிடாமல் சேதுசமுத்திரத் திட்டத்தைத் தடுப்பதுதான் இவர்கள் செய்யும் இன்றைய அரசியல்.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இராமாயனம் கூறும் அயோத்தி நகரம் இந்தியாவிலேயே இல்லை, இருந்தால் அது ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்றனர். இந்திய தொல்பொருள் ஆய்வாளர்களோ பாபர் மசூதியின் தூண்கள் முதல் அதன் 400 ஆண்டுகால வரலாற்றையும் ஆய்வு செய்தனர். ராமர்கோயில் என்று ஒன்று இருந்து அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டினார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்ற உண்மையை போட்டு உடைத்தனர். இதைப் பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும் போதே சங்பரிவார்கள் பாபர் மசூதியை உடைத்தனர். இந்திய முஸ்லீம்களோ அன்று முதல் இன்று வரை பாபர் பள்ளிவாயில் விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்தே கிடக்கின்றனர். பாபர் மசூதியை உடைத்த இந்த சங்பரிவார பாசிஸ்டுகள் உடைத்த கையோடு நாட்டில் பெரும் இரத்தக் களறியை ஏற்படுத்தினர். முஸ்லீம்களின் உயிர் உடமைகளை பெருமளவில் சூறையாடினர்.

இவர்கள் சட்டம், நீதிமன்றம், வரலாற்று உண்மைகள் என்று எதையும் மதித்ததாக சரித்திரம் இல்லை. இருந்தால் கூறுங்கள். இந்த ராமர் பால விஷயத்தில் நமது நாட்டின் அகழ்வாராய்ச்சித் துறை முதல் அமெரிக்கவின் நாஸா அறிவியல் வல்லுனர்கள் வரை ‘அது பாலம் அல்ல மாறாக சுண்ணம்பு மற்றும் களிமண்களின் இயற்கை படிவம்தான்’ என்ற ஆய்வறிக்கையை மட்டும் இந்த சங்பரிவார கொலைக் கும்பல் மதிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆதம் பாலமா? ராமர் பாலமா?

நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் இறைதூதரும் ஆவார்கள் என்பதும், அவர்கள் சுவனத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டார்கள் என்பதும் முஸ்லீம்களின் நம்பிக்கை. இலங்கையில் வாழுகின்ற மக்கள், முதல் மனிதர் ஆதம் அவர்கள் இலங்கைக்கு வந்ததாகவும் அவர்கள் இறங்கிய அடையாளமாக ஆதம் மலையையும், அவருடைய கால்பதிவையும் காண்பிற்கின்றனர். இது மத வேற்றுமை இல்லாமல்; அனைத்து இலங்கை மக்களும் நம்பும் நம்பிக்கை. நபி ஆதம் (அலை) அவர்களுக்கு ஞானங்கள் அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் இறைவேதமாம் திருக்குர்ஆனில், அவர்கள் இலங்கையில் இறங்கியதற்கு வெளிப்படையான சான்றுகள் அறியப்படவில்லை. ராமர் பாலம் என்ற சொல் வழக்கை சங்பரிவார்கள் திரித்து பயன்படுத்தியதற்கு முன்புவரை அம்மணற்திட்டிற்கு ஆதம் பாலம் என்ற சொல்வழக்கே இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்தியத் திருநாட்டின் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் அது பாலம் அல்ல மாறாக சுண்ணாம்பு மற்றும் களிமண்களின் படிவம்தான் என்ற ஆய்வறிக்கையை நம்புகிறோம். இந்திய ஆய்வாளர்களை மதிப்பவர்கள் இந்திய முஸ்லீம்கள் என்பதை பாபரி மஸ்ஜித் முதல் இந்த ஆதம்பாலம் வரை உலகிற்கு நிரூபித்துள்ளோம்.

ஆனால் சங்பரிவாரங்களோ இந்த சுண்ணாம்புப் படிவம் மனிதனால் கட்டப்பட்டது என்கிறார்கள். ஒருவேளை இலங்கையிலிருந்து நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கலாம். அவ்வேளையில் கடல் குறிக்கிட்டதால் களிமண் மற்றும் சுண்ணாம்புப் பாறைகளை வைத்து நபி ஆதம் (அலை) அவர்கள் ஒரு பாலத்தைப் போல கட்டியிருக்கலாம் என்ற சிந்தனை தற்போது எழுகிறது.

அப்பாலத்தை மனிதன் கட்டினான் என்றால் அது முதல் மனிதரும் இறைத்தூதருமான நபி ஆதம் (அலை) அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவுஞானங்கள் அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்திருப்பதால் பாலம் கட்டும் தொழிநுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தது ஒரு அதிசயமில்லை. ஆகையால் அப்பாலத்திற்கு சொந்தக்காரர்கள் முஸ்லீம்கள்தான் என்று இப்போது நிரூபனமாகிறது. எனவே அம்மணற்திட்டு ராமர் பாலமல்ல மாறாக ஆதம்பாலம் என்பதுதான் சரியாகும். எனவே எந்த நன்மையையும் அளிக்க இயலாத அப்பாறையை இடித்துத்தள்ளி விட்டு மக்களுக்கு பெரும் பயனளிக்கும் சேதுசமுத்திரத்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என அதன் சொந்தக்காரர்களான ஒட்டு மொத்த முஸ்லீம்களும் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

ராமர் பாலத்தை கட்டியது, முதல் மனிதரும் முதல் முஸ்லிமுமான ஆதம் (அலை) அவர்கள்தான். அப்பாலத்திற்கு சொந்தக்காரர்கள் முஸ்லீம்கள்தான் என்று மத்திய அரசு பொது அறிவிப்பு செய்துவிட்டாலே சங்பரிவாரங்கள் ‘ராமர் எங்கள் உயிர் ஆதம் எங்கள் மயிர்’ என்ற கோரசுடன் சுத்தியல், கடப்பாறை, கோடாரிகளோடு கரசேவைக்கு கடலில் இறங்கிவிடுவார்கள். பின்னர் ராமர் பாலத்தின் கதை கந்தலாகிவிடும். அதை இடிப்பதற்கு ஆகும் செலவும் அரசுக்கு மிச்சப்படும். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து அச்சுண்ணாம்புப் பாறையை சங்பரிவார்கள் கைகளாலேயே இடிக்கச் செய்வதற்கு இந்த ஒரேயொரு வழிதான் உள்ளது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முட்டாள்தனமான உளரல்கள்

ராமர் பாலத்திற்கு உங்களிடம் இருக்கும் ஆதாரம் எங்கே என்று சங்பரிவாரத்திடம் கேட்டால் உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டனாருடைய பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுக்கிறார்கள் அறிவாளிகள் என்ற நினைப்பில். நமது முப்பாட்டனுடைய முப்பாட்டனாரின் பெயர் நமக்குத் தெரியவில்லை என்றால் நமது முப்பாட்டனுடைய முப்பாட்டனார் இவ்வுலகில் தோன்றவில்லை என்று அர்த்தமாகுமா? முப்பாட்டனுடைய முப்பாட்டனார் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அவர்களின் பேரக்குழந்தைகளான நாமே சாட்சியான இல்லையா? என்றெல்லாம் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமர் கட்டிய பாலமிது, இதற்கெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் தர இயலாது என்கின்றது இந்த சங்பரிவாரக் கூட்டம். நல்லவேளை இந்த சர்ச்சை கடந்த கொலைகார பிஜேபியின் கொடிய ஆட்சியில் சூடுபிடித்திருந்தால் இதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தையே புதிதாக அச்சடித்து ராமர் பால வரலாறு என்று குழந்தைகளின் கல்வியில் திணித்திருப்பார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லீம்கள் செய்த வீரத்தியாக வரலாற்றிலேயே கைவைத்த சீமான்களாயிற்றே இவர்கள். உண்மை வரலாறுகளை திரிப்பதில் சங்பரிவார்களுக்கு நிகர் வேறெவரும் உண்டோ?.

பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா என்று ஒன்று இருந்ததா? 1000 வருடங்களுக்கு முன்னர் பல நூற்றுக்கனக்கான நாடுகளாக இருந்தது நம் இந்தியா. இந்நாடுகளை தங்களின் 800 வருட ஆட்சியில் ஒரே இந்தியாவாக மாற்றிக்காட்டியது முகலாயர்கள் அல்லவா?. சங்பரிவார்கள் எவ்வளவுதான் மறைத்தாலும் தபசில், பஞ்சாயத், வாயிதா, தாசில்தார் என மருவிய பல அரபிசொற்கள் இன்றும் நம் வழக்கத்தில் உள்ளது சட்டத்தையும், ஆட்சிமுறையையும் கற்றுத் தந்தது அந்த முஸ்லிம் மன்னர்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

எனவே பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமர் கட்டிய பாலமிது என்று சொல்வதெல்லாம் ஒரு சமாளிப்புதான் முட்டாள்தனமான உளரல்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்

ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பல நூற்றுக்கனக்கான குட்டி நாடுகளின் தொகுப்பே இந்தியா. ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவிற்குள் இத்தனை நாடுகள் என்றால், பதினேலரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் அகண்ட பாரதத்தில் சீனாவும், எகிப்தும் இருந்திருக்க வேண்டும். இதை உறுதிப் படுத்தும் வகையில் இராமாயணத்தில் வரும் பகவான் அனுமார் கையில் இருப்பதைப் பாருங்கள். பார்க்கும்போது அது மலைபோல தெரிந்தாலும் அது மலையல்ல மாறாக எகிப்து நாட்டில் ராம பகவான் கட்டிய பிரமிடின் மாதிரி வடிவமே அது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமபக்தர்களும், நிர்வான போலிச்சாமியார்களும் களம் இறங்குவர்.

இதைப் போலவே சீனப் பெருஞ்சுவரையும் ராமனோ அல்லது லட்சுமனனோ தான் கட்டி இருக்க வேண்டும். 7000 கிலோமீட்டர்கள் நீளத்தில் ஒரு பெருஞ்சுவரை மனிதரால் கட்டமுடியுமா? இந்துத்துவாவின் அகண்ட பாரதக் கனவை நினைவாக்குவதற்கு சீனாவின் மீது நாம் படை எடுத்தாக வேண்டும். இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல நாம் அகண்ட பாரதத்தை அமைப்பதோடு ராமர் பெருஞ்சுவரையும் மீட்டெடுக்கலாம். இவ்விரு நாட்டின் தலைவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்குத் தங்கம் பரிசளிக்கப்படும் என்று தேதாந்தி போன்ற குடிகாரர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

இராமாயணம் அறிவுப்பூர்வமானதா?

இராமாயணம் என்பது இந்துக்களை கூறுபோட்டு பிரித்தாலும் சூழ்ச்சிகளால் பின்னப்பட்ட கற்பனை கதாபாத்திரமே என்பதை அறிஞர்கள் பலரும் இராமாயணத்திலிருந்தே நிரூபிக்கின்றனர்;. இதற்கு ஒருபடி மேலே போய் தந்தை பெரியார் பாசறையினரும், விடுதலை ஏடும், முரசொலியும் இராமாயணம் என்பது ஒரு முட்டாள்தனமான கதை என்பதை தகுந்த ஆதராங்களோடு சமீபநாட்களில் கிழித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நாமும் இராமாயணத்தின் மடத்தனமான கற்பனைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதற்;கு அவசியம் இல்லை.

இராமாயணம் இராமன் புகழ்பாடுவதாக சிலர் நம்புகின்றனர். இராமாயணம் கூறும் வாலியின் வதைப் படலத்தை படித்தால் தெரியும். அது என்ன என்கிறீர்களா? வாலி என்ற வலிமைவாய்ந்த போர்வீரனை அவனுடைய எல்லையில் நேருக்கு நேராக சந்தித்திட எவராலும் இயலாது. அவ்வாறு வாலியை அவனது எல்லைக்குள் எதிர்கொண்டால் அவ்வெதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும். பின்னர் வாலிதான் சண்டையில் வெற்றிபெறுவான், இது வாலிபெற்ற வரம் என்கிறது இக்கற்பனை புராணம்.

வாலியை எதிர்கொண்ட இராமனோ வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்றதாகவும் சொல்கிறது இந்த பிராடுபுராணம். இவ்வாறு தனது பின்புறமாக, கோழைத்தானமாக தன்மீது அம்பெய்த மாவீரன் ராமன் அவர்களை வாலி, அவன் முகத்திற்கு முன்னாலேயே திட்டித்தீர்ப்பான். இதற்குத்தான் வாலி வதைப்படலம் என்று இராமாயணம் கூறுகிறது. வாலி என்ற வீரனை வெல்லமுடியாத பலகீனமான ஒருவனா கடவுளாக இருக்க முடியும்? இதற்கு வாலியை வணங்கிவிட்டு போய்விடலாம். வாலியை பின்புறமாக அம்பெய்து கொன்ற கோழையாக அல்லவா இராமனை சித்தரிக்கிறது. மேலும் ராமனை கொலைகாரன் என்றல்லவா இராமாயணம் கூறுகிறது. இப்போது சொல்லுங்கள் இராமாயணம் இராமனைப் புகழ்கிறதா இகழ்கிறதா?

மேலும் இராமாயணத்தின் க்ளைமாக்சே இராமன் தன் மனைவியான சீதையை 10 தலைகள் கொண்ட இராவனனிடமிருந்து மீட்பதுதான். தனது எதிரியான இராவனனிடம் இராமக்கடவுள் சண்டையிட்டாராம். இறுதியில் இராவனன் ஒரு அரசமரத்தினுள் புகுந்துவிட்டானாம். அப்போது இராமன் அரசமரத்தோடு இராவனனை வெட்டி வீழ்த்தினானாம். அதைப்பார்த்த கோழியொன்று ‘கொக்கரக்கோ கோ’ என்று கூவியதாம். ‘கொக்கு’ என்பதற்கு ஆலமரம், அரசமரம் என்று பொருள். ‘அர’ என்றால் அருத்த எனப்படும். ‘கோ’ என்றால் அரசன் அல்லது வாழ்க என்று பொருள் என்ற விரிவுரை வேறு. ஆக ‘கொக்கரக்கோ கோ’ என்று கோழி கூவியதன் பொருள் ‘அரசமரத்தோடு அருத்து தனது எதிரியைக் கொன்ற மன்னா வாழ்க’ என்பதாகும். அன்று முதல் உலகிலுள்ள கோழிகள் அனைத்தும் ‘கொக்கரக்கோ கோ’ என்று கூவுகிறதாம்.

என்னே அருமை! இதில் எந்த நாட்டிலேயா கோழி கூவுகிறது? சேவல்தானய்யா கூவுகிறது. புராண விரிவுரைப்படி அந்தக்கோழி தமிழ் மொழியிலா கொக்கரக்கோ கோ எனக் கூவியது? என்று நாம் வினா எழுப்பவில்லை. மேலும் 10 தலைகள் கொண்ட ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா? ஒருமனிதன் மரத்திற்குள் ஊடுருவிச் செல்லமுடியுமா? என்றெல்லாம் கூட நாம் கேட்கவில்லை.

முதலில் கடவுளுக்கு சீதை என்ற மனைவி தேவையா? தனது எதிரி தன்மனைவியை கடத்திக் கொண்டு போகுமளவிற்கு அக்கடவுள் பலகீனமானவனா? இவ்வாறு ராமன் கடவுள் என்றும் சீதை அவனின் மனைவியென்றும் என்றும் நம்புபவர்கள் இதை ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்? என்றுதான் கேட்கிறோம்.

வாழ்மீகி என்பவர்தான் இராமாயணம் என்ற கற்பனை கதையை வடித்தவர். அதை தமிழுக்கு தந்தவர் கம்பர். இராமர் என்ற கற்பனை கதாபாத்திரம் உண்மை என்றால் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வாழ்மீகி மேற்கண்ட விஷயங்களை எழுதினார். வாழ்மீகிக்கும் இராமருக்கும் இருந்த தொடர்புக்கு என்ன ஆதாரம்? இராமாயணம் அறிவுப்பூவமானதா? சங்பரிவார்கள் பதில் சொல்வார்களா?

நமது நிலைபாடு

பிற மதக்கடவுள்களை திட்டக்கூடாது என்பது குர்ஆன் முஸ்லீம்களுக்கு இடும் கட்டளை. கடவுள் என்பவன்; ஒருவன். அவன் தனித்தவன், அவன் எந்தத் தேவையுமற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை எவராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று இஸ்லாம் கடவுளைப்பற்றி கூறுகிறது. மேலும் கடவுள் ஊன், உறக்கம், மறதி, மயக்கம், இச்சை, துன்பம், மரணம், என்ற அனைத்து பலகீனங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது.

நாம் இராமாயணத்தைப் பற்றி எழுதியிருப்பது எவர் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அது நமது நோக்கமுமல்ல. அதே நேரத்தில் கற்பனை இராமனையும், இல்லாத இராமர் பாலத்தையும் இருப்பதாகக் கூறி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு இந்தியர்களாகிய நாம் அனுமதிக்கக் கூடாது. வீன் கற்பனையை கருவாக வைத்து நாட்டிற்கு பயன் தரும் சேதுசமுத்திரத்தை முடக்கிடவிட சங்பரிவாரங்கள் செய்யும் ஐந்தாம் தர அரசியலுக்கு நாம் பலியாகிவிடக்கூடாது. தமிழகத்திற்கு பெருமையையும், நன்மையையும் அள்ளித்தரும் இத்திட்டத்திற்கு தமிழர்களாகிய நாம் முழுஆதரளவு அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில் 7 கோடி தமிழர்களும் இனமத பேதமின்றி ஒரே அணியில் நிற்க வேண்டும் என்று இஸ்லாமிய இணையப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

யார் பொய்யர்? (பாகம்-05)

செப்டம்பர் 16, 2007 by முஸ்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பொய்ர் என்றும் புரட்டர் என்றும் ஒரு கூட்டத்தினர் இணையத்தில் அவதுர்றுகளை எழுதியும் பரப்பியும் வருகின்றார்கள் அவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய இணையப் பேரவையின் சார்பாக கொடுக்கப்படும் பதில்களின் தொடரின் நான்காம் பாகம் இது. முதல் நான்கு பாகங்களை வாசிப்பதற்கு (பாகம்-01) , (பாகம் – 02), (பாகம் – 03) , (பாகம் – 04)

www.iiponline.org

பாகம் : 5/5

இவர்களுக்குக் கிடைத்த அந்த ஓரே ஆதாரம் (?)

// அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்? //

தங்களின் கோர சிந்தனையில் உதித்த அக்மார்க் பொய்களை மொழி பெயர்ப்பாக கட்டவிழ்த்துவிட்டு அதிலிருந்து விவாதம் வைத்துள்ளனர். மேற்கண்ட இந்த ஹதீஸ் இறுதித்தீர்ப்பு நாளைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக ஒரு குழுவின் மரணத்தைப் பற்றி சொல்கிறது. இப்படித்தான் இவர்களின் அபத்தக்கட்டுரை முழுவதும் பொய்களும் அவதூறுகளும் மடைதிறந்த வெள்ளமாய் காட்சியளிக்கிறது. ஒரு துறையில் ஒருவர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றால் அத்துறையைப் பற்றிய அறிவு அவரிடம் முழுமையாக இருக்கவேண்டும். தன்னைப் படைத்த இறைவனையே பிரித்தறிந்து சரியாக உணர முடியாத இவர்கள், நபி நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை, தங்களை ஹதீஸ்கலை வல்லுனர்களாக எண்ணிக்கொண்டா ஆய்வு செய்ய கிளம்பியிருக்கிறார்கள்?

இந்த ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன்னால் மறுமை நாளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை முதலில் இவர்கள் விளங்கி இருக்க வேண்டும். அல்லாஹ்வைத்தவிர இறுதிநாளைப் பற்றிய ஞானம் எவருக்கும் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதில் எவருக்கும் என்பதில் நபி (ஸல்) அவர்கள் உட்பட மனிதர்கள் அனைவரும் அடங்குவர். எனவே நபி (ஸல்) அவர்களுக்கும் மறுமை எப்போது வரும் என்பது தெரியாது. இதை நபி (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 31:34)

நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் ‘அது எப்போது வரும்?’ என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர், அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்’ (அல்குர்ஆன் 79:42-45).

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள் நீர் கூறும் ”அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது (அல்குர்ஆன் 7:187).

இப்போது விஷயத்திற்கு வாருங்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக மொழிபெயர்ப்பு செய்துள்ள அந்த ஹதீஸைதான் தங்களிடமுள்ள பலமான ஆதாரமாக வெளியிட்டு அவர்களின் ஆக்கத்தில் பலமுறை பதிந்திருக்கின்றனர். இதை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் பொய்யன் யார்? என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேற்கண்ட இந்த அறிவிப்பு நபிவழிக் கோர்வைகளான புகாரியில் 6511 வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 7335 வது அறிவிப்பாகவும் பதிவாகியுள்ளது. அந்த ஹதீஸூம் அதன் சரியான மொழி பெயர்ப்பும் பின்வருமாறு

ஸஹீஹூல் புகாரி 6511 வது ஹதீஸின் அரபி மூலம்

حدثني صدقة أخبرنا عبدة عن هشام عن أبيه عن عائشة قالت كان رجال من الأعراب جفاة يأتون النبي صلى اللهم عليه وسلم فيسألونه متى الساعة فكان ينظر إلى أصغرهم فيقول إن يعش هذا لا يدركه الهرم حتى تقوم عليكم ساعتكم قال هشام يعني موتهم

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் சொன்னதாக ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது’ என்று கேட்பார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்’ என்று கூறுவார்கள். இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்து பெறும் ஸஹீஹூல் புகாரியில் இதைப்பற்றிய தெளிவான விளக்கம் இருந்தும், இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்களே ஸாஅத் என்பது மரணத்தைக் குறிக்கும் என்று அந்த ஹதீஸிலேயே தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் வேண்டுமென்றே திட்டமிட்டு இவர்கள் உண்மையை மறைத்து எழுதியுள்ளார்கள்.

மேற்படி ஹதீஸ் புகாரியில் ‘சக்கராத்துல் மௌவ்த்’ அதாவது மரணவேளை, (அல்லது மரணத்தின் வேதனை) என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் புகாரி (ரஹ்) அவர்களைப் பொருத்தவரை ஒரு ஹதீஸ் எந்தக்கருத்தைச் சொல்கிறதோ அதன் கருத்தைத்தான் அதற்குத் தலைப்பாக இட்டு பதிவு செய்வார்கள். உதாரணமாக தொழுகையைப் பற்றி வரும் ஹதீஸ்கள் அனைத்தையும் தொழுகையின் வாயில் எனப் பொருள்படும் ‘பாபுஸ் ஸலாத்’ என்று தலைப்பிட்டு பதிவார்கள். இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இறுதி தீர்ப்பு நாளைப் பற்றிய ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ள தலைப்பில் பதியாமல் மரணத்தைப் பற்றிய செய்திகளை தெரிவிக்கும் ஹதீஸ்களின் வரிசையில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸஹீஹூல் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹூல் பாரியில் இந்த ஹதீஸைப் பற்றிய முழுத்தகவலும் உள்ளது. அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் ‘அஸ்ஸாஅத்’ எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் ‘ஸாஅத்துகும்’ வந்துவிடும் என்கின்றனர்.

இந்த அறிவிப்பில் ‘ஸாஅத்’ ‘ஸாஅத்துகும்’ என்றால் என்ன என்பதை விளங்கிவிட்டாலே இந்த ஹதீஸ் எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ‘ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல் நேரம், வேளை, மரணம், இறுதிநாள் என்று பல அர்த்தங்களையும் கொடுக்கும். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்த ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தை ‘கும்’ என்ற முற்று பெற்றுள்ளது. ‘கும்’ என்பதற்கு தமிழில் முன்னிலை பன்மையான உங்களுடைய, உங்களின், உங்களுக்கு என்ற பொருளைத்தரும். எனவே ‘ஸாஅத்துகும்’ என்ற இந்த சொல் உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று பொருள்படும்.

இப்போது இவர்களின் கூற்றுப் படியே ‘ ஸாஅத்’ என்ற இந்த அரபிச் சொல்லிற்கு இறுதிநாள் என்றே பொருள் வைத்து மேற்கானும் ஹதீஸைப் படியுங்கள். அதாவது வெளிக்கிராமத்திலிருந்து மதினா வந்த ஒரு குழுவினர் இறுதிநாள் எப்போது வரும் என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவுகின்றனர். அப்போதுதான் நபிகளார் அக்குழுவிலிருந்த ஒரு சிறுவரை சுட்டிக்காட்டி இவருக்கு வயது முதுமை ஆகும் முன்னர் உங்களுடைய இறுதிநாள் வந்துவிடும் என்றார்கள் என்று பொருள் அமையும்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே! இப்போது விளங்கிக் கொள்ளுங்கள் பொய்யுரைத்தது யார் என்று? ‘ஸாஅத்துகும்’ என்ற அரபி வார்த்தைக்கு உங்களுடைய நேரம், உங்களுடைய வேளை, உங்களுடைய மரணம், உங்களுடைய இறுதிநாள் என்று எந்த வார்த்தைகளை அமைத்தாலும் இந்த ஹதீஸ் அக்குழுவின் மரணத்தை அல்லவா குறிக்கிறது. இணையத்தில் வலைப்பூக்கள் கட்டணமின்றி கிடைக்கிறது என்பதற்காக அதில் வாயில் வந்ததை எல்லாம் உளறிக் கொட்டுவதற்குப் பெயரா ஆய்வு? என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

இது போன்ற பல பொருள் கொடுக்கும் ஒரு சொல்லை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த விஷயங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நேரடியாக அறிந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். எனவே இவ்வாறான ஹதீஸ்களை அந்நபித்தோழர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அதுபோல நாமும் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி இன்று இப்பூமியில் வசிக்கும் எவரும் நூறு வருடங்களுக்குப் பின் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்ற கருத்துப்படக் கூறினார்கள். அதாவது தானும், தனது தோழர்களும், அன்று பூமியில் பிறந்து இருந்த அனைவரும் நூறு வருடங்களில் மரணமடைவார்கள் என்ற அறிவிப்பாகும் இது. அன்று உயிரோடு இருந்தவர்களுக்கான மரணக்கெடு நூறு வருடங்கள் என்பதைப்போல அந்த குழுவினரின் மரணக்கெடு அச்சிறுவனின் வயது முதிர்வாகும். அதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

கியாமநாளின் பெரிய பத்து அடையாளங்களாக புகை மூட்டம், சூரியன் மேற்கே உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் வருகை, நபி ஈஸா (அலை) வருகை, யஹ்ஜூஜ் மற்றும் மஹ்ஜூஜ் கூட்டம் வருகை, கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபுப் புகுதியில் ஒரு பூகம்பம், பெரும் நெருப்பு ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் இறைவனின் முன்அறிவிப்பாக சொன்னார்கள். இவ்வாறு எவராலும் கணிக்க இயலாத காலத்தில் நிச்சயம் நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளை கியாமநாளின் அத்தாட்சிகளாக அம்மக்களுக்குச் சொன்ன நபி (ஸல்) அவர்கள், அச்சிறுவனின் வயது முதிர்வுதான் மறுமை நாளின் அடையாளம் என்றிருந்தால் தன் கண்ணுக்கு முன்னால் இருக்கும் அச்சிறுவரைத்தான் மறுமைநாளின் முதன்மையான மிகப் பெரிய அடையாளமாக முன்னிலைப்படுத்தி இருப்பார்கள்.

இவ்வாறு கியாமநாள் வருவதற்கு முன்னர் நிகழவிருக்கும் பல அடையாளங்களையும் இறைவனின் முன்னறிவிப்பாகத் தெளிவாக விளக்கிச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் இதில் எந்த ஒரு நிகழ்வும் நடந்திராத அச்சூழ்நிலையில், அச்சிறுவரைக் குறித்து வரும் அந்த ஹதீஸை இவ்வுலக அழிவிற்கு முன்னரிவிப்பாகவோ, அளவுகோளாகவோ சொன்னார்கள் என்று அறிவுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ஹதீஸ் மறுமைநாளைப் பற்றி சொல்லவில்லை மாறாக அக்குழுவினரின் மரணத்தைப் பற்றிதான் விளக்குகிறது என்றுதான் சாதாரணமாக விளங்குகிறது.

மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பதை நான் அறிய மாட்டேன் என்று போதித்த நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்களா? என்று இவர்கள் சிந்தித்திருந்தால்,

இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் ஹிஷாம் பின் உர்வா (ரழி) அவர்கள் ‘ஸாஅத்’ என்பது மரணத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளதை இவர்கள் கவனித்திருந்தால்,

மேலும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை மரணவேளை என்ற தலைப்பில் ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆய்வு செய்திருந்தால், முஹம்மது ஒரு பொய்யன் என்று நிதானமிழந்து, வசை மாறிப் பொழிந்து தங்களைத் தாங்களே இழிவுபடுத்திய அவலநிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

நபி (ஸல்) அவர்களை உண்மையாளர்தான் என்பதை, இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தும் முன்னர் நாம் நிறுவியுள்ளோம். அரபி மொழி பண்டிதர்களாயிருந்த அன்றைய மக்கா மதீனா நிராகரிப்பாளர்கள் கூட இந்த ஹதீஸில் ‘கும்’ என்ற வார்த்தையை வெட்டி எடுத்துவிட்டு குழப்பம் செய்து விவாதிக்க வில்லை. அந்த அன்சாரி சிறுவரின் மரணத்திற்குப் பிறகும் அன்று வாழ்ந்த இறைநிராகரிப்பவர்கள் எவரும் இந்த விஷயத்தில் முஹம்மது பொய் சொல்லிவிட்டார் என்று அவதூறு சொல்லவில்லை. அவர்கள் கூட இந்த ஹதீஸை சரியாக விளங்கியிருந்ததை உணர்கிறோம். எனவே இவர்கள் அந்த அபூஜஹ்ல் வகையறாக்களைவிட, மக்கா குறைஷி காபிர்களை விட, மதீனத்து நயவஞ்சகர்களை விட கொடிய எண்ணம் கொண்டவர்களாக, குறுமதி படைத்தவர்களாக இருப்பதை பார்க்கிறோம். அணுகுண்டைவிட ஆபத்தான அபூஜஹ்லைவிட மோசமான இவர்களின் பொய்களை நல்லெண்ணம் கொண்ட நாம் அனைவரும் அலட்சியம் செய்து ஒதுக்கிவிட கடமைப்பட்டுள்ளோம்.

பகிரங்க சவால்

இஸ்லாம் என்ற இந்த சத்திய மார்க்கம் ஏதோ சென்ற மாதம் துவங்கங்கப்பட்ட ஜாதி சங்கத்தைப் போல எண்ணிக்கொண்டு இஸ்லாத்தை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று இப்படியொரு அபத்தக்கட்டுரையை வடித்துள்ளார் கட்டுரையாளர். இஸ்லாம் என்பது இதைவிட பல கொடூர வசைமொழிகளையும் கடந்து, தன் மீது ஏவப்பட்ட, கணைகளாய் பாய்ந்த பல சவால்களையும் வென்று 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வுலகில் மேலோங்கி நிற்கிறது. காரணம் இது மனித கற்பனையில் தோன்றிய இதிகாசமோ, இஸமோ அல்ல. அனைத்துலகையும் படைத்த இறைவனால் தன் படைப்பினத்திற்கு வழங்கப்பட்ட முழுமையான வாழ்க்கை நெறி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பொய்யர் என்பதில் உறுதியாக எவரும் இருப்பார்களேயானால், 1400 ஆண்டுகளாக இவ்வுலகில் எவரும் எதிர்கொண்டு வெற்றி பெறாத வல்ல இறைவனின் அந்த பகிரங்க சவாலையே இவர்களுக்கும் நாம் தொடுத்து முடிக்கிறோம்.

‘இவ் வேதத்தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்களா? ”(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே இதற்குத் துணை செய்ய அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 13 : 11)

முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், அந்த சந்தேகத்தில் உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை யெல்லாம் ஒன்றாக அழைத்து வைத்துக்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். அப்படி நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 2 : 23, 24)

யார் பொய்யர்? (பாகம்-2)

ஆகஸ்ட் 31, 2007 by முஸ்லிம்

WWW.IIPONLINE.ORG

இப்பொய்யர்களின் முன்னோர்கள் பற்றி திருக்குர்ஆன்.

எந்த சமுதாயமும் தனக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை பொய்ப்பிக்காமல் இருந்ததில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறைதூதுச் செய்தியை அவர்கள் சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அவர்களை பொய்யர்கள் என்று கூறி எதிர்க்கவே செய்துள்ளனர். அல்லாஹ்வின் வழிகாட்டலை அலட்சியம் செய்து பரிகசித்தோர் அழிந்த வரலாறுகளையே நாம் அறிகிறோம். இதைத்தான் திருமறைக் குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களில் தெளிவாக எடுத்துரைக்கிறது.

திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம். ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; ”நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை” என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள். (திருக்குர்ஆன் 30 : 58)

நபியே! இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். இவ்வாறே இப்றாஹீமுடைய சமூத்ததினரும் லூத்துடைய சமூகத்தினரும் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள். இவ்வாறே மத்யன் வாசிகளும் முற்பட்டனர். இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்வே முற்பட்டனர். எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்;. என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!) (திருக்குர்ஆன் 22 : 42,43,44)

மேலும் இவர்களுக்கு முன்னிருந்த ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறே பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை. ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்) (திருக்குர்ஆன் 34 : 45)

(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது. ”பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 6 : 10,11)

உண்மைக்கும் நேர்மைக்கும் ஓர் அழகிய முன்மாதிரி

இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த அல்லாஹ்வினால் அருளப்படும் இறைசெய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இத்தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம். பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளக்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அவ்வவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. ‘அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்’ என்று துவங்கும் அபஸ என்ற அத்தியாயத்தின் முதல் 12 வசனங்களை அல்லாஹ் அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் தன்னை கடுமையாக கண்டிக்கும் இவ்வசனங்களை மறைத்திருக்கலாம். தனது சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் இறங்கிய இவ்வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறார்கள். தனது தோழர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் முகம் சுளித்த அத்தவறுக்காகத்தான் இவ்வசனங்கள் இறங்கியது என்ற காரணத்தையும் கூறுகிறார்கள். இவ்வசனம் இறங்கிய பின்னர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அவர்களிடம் தனது மதிப்பை அதிகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட உண்மைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாய் திகழ்ந்தவர்களை, அகில உலகிற்கும் அழகிய முன்மாதிரியை எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்யன் என்று தூற்றுகிறார்கள் என்றால் நாம் இவர்களை என்ன சொல்வது?

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள்.

மக்காவிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள் மதினா சென்ற பிறகு அவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் ஒருசேரப் பெறுகிறார்கள். பைத்துல்மால் என்னும் அரசுக்கருவூலத்திற்கு நிதிகளும் கனிவர்க்கங்களும் வந்து குவிந்தது. ஒரு நாள் சிறு வயது தனது பேரக்குழந்தை ஹஸன் (ரழி) அரசுக்கருவூலத்தில் இருந்த ஒரு பேரீத்தம் பழத்தை தனது வாயில் விட்டுவிடுகிறார். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரக்குழந்தையின் வாயில் தன்விரலை விட்டு பேரீத்தம் பழத்தை வெளியே துப்பச்செய்து ‘அப்பேரீத்தம் பழம் அரசாங்கத்தின் சொத்து தமக்குச் சொந்தமானதல்ல’ என்று அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய நேர்மையாளரையா இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக ஆட்சி அதிகாரத்திலிருந்தும் அரண்மனை சுகம் காணாமல் இறுதி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணிக்கிறார்கள். இந்த சத்திய இஸ்லாத்தைச் சொல்லி தனக்காக எந்த நிலையிலும் செல்வம் திரட்டவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அன்றாடம் வயிரார உண்டதில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து அவர்கள் வீட்டில் அடுப்பெறிந்த சரித்திரமில்லை. பல நாட்கள் பட்டினியோடும், உண்ண உணவின்றி வெறும் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையுமே உணவாக உட்கொள்ளும் அளவிற்கு ஏழ்மை நிலையிலே வாழ்ந்தார்கள். தனது கவச ஆடையை தன் உணவிற்காக அடமானம் வைத்து அதை மீட்க முடியாத ஏழ்மை நிலையிலேயே அன்றைய மாமன்னராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கின்றார்கள். இத்தகைய பண்பாடுமிக்க சரித்திர நாயகரைத்தான் இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள். இப்படி பட்டனி கிடந்து நோவதற்காகவா ஒருவர் பொய் சொல்ல வேண்டும்?

நம் இந்திய நாட்டில் ஒருவன் எம்.எல்.ஏ ஆகிவிட்டாலே அவன் போடும் கூத்துக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைய உலகில் கோலோச்சியிருந்த ரோமாபுரியும் பாரசிகமும் கண்டு நடுங்கிய முஹம்மது (ஸல்) என்ற மாமன்னருக்கு பல்லாக்கு இல்லை, வாயிற்காப்போன் இல்லை. அவர்களுக்கு முன் பின் அடியாட்கள் இல்லை. எவரையும் தனது காலில் விழுவதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை. மனிதன் காலில் மனிதன் விழும் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்தார்கள். தனக்காக யாரும் எழுந்து மரியாதை செலுத்தக்கூடாது என்றார்கள். மிகச்சாதாரண மனிதன் எதிர்பார்க்கும் புகழைக்கூட வெறுத்தார்கள். கிருத்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறி புகழ்ந்தது போன்று என்னை புகழ்ந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள். இத்தகைய சீர்திருத்தச் செம்மலைத்தான் இவர்கள் பொய்யன் என்று சொல்கிறார்கள்.

இவர்களின் நரகல் நடைவிமர்ச்சனங்களை பார்வையிடும் நடுநிலையாளர்கள் எவரும் ‘மல்லாந்து படுத்து காரிக்காரி உமிழும் அறிவிலிகளே! உங்கள் மடமைத்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா? பார் போற்றும் இம்மனிதப் புனிதரையா நீங்கள் பொய்யன் என்று சொல்கிறீர்கள்? கண்ணாடி முன்னின்று உங்களின் கோர முகத்தை பார்த்துவிட்டா ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என எழுதினீர்கள்?’ என்று இவர்களைக் காரி உமிழ்வார்கள்.

சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்…

யார் பொய்யர்? (பாகம்-1)

ஆகஸ்ட் 31, 2007 by முஸ்லிம்

WWW.IIPONLINE.ORG

உண்மைகளின் தாயகம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2 : 42)

சமீபகாலமாக இஸ்லாத்தை ஆய்வு செய்கிறோம் பாருங்கள் என்று தமிழகத்தில் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று தலைப்பிட்டு தார்ப்பாயில் வடிகட்டிய தங்கள் பொய்களை கட்டுரையாக வடித்து இணையத்தில் ஏற்றுமதி செய்துள்ளனர். இவர்களின் பித்தலாட்டங்களை தமிழ் கூறும் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டவே இப்பதில் கட்டுரையை பதிகிறோம்.

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

150 கோடி முஸ்லீம்களின் ஒப்பற்ற தலைவரை நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு பொய்யன் என்று வசைமாறி பொழிந்துள்ள அக்கட்டுரையை எழுதிய அன்பருக்கு ஒன்றை சொல்லி வைக்கிறோம். அது ‘உங்களின் நரகல் நடை விமர்சனங்களுக்கு நீங்கள் கூனிக் குறுகும் அளவில் உங்கள்; தொனியிலே எங்களால் விடையளிக்க இயலும் என்றாலும் இஸ்லாம் என்ற பகுத்தறிவு பாசறை அத்தகைய ஒழுக்கத்தை எங்களுக்குக் கற்றுத்தரவில்லை. நீங்கள் இஸ்லாத்தை விளங்கவேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன்; அணுகாததுவரை உங்களால் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவே இயலாது. இறைவேதமான திருக்குர்ஆனை, அதை நமக்குப் பெற்றுத் தந்த இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, இஸ்லாத்தின் சீரிய கோட்பாடுகளை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு சத்தியத்தை சரியான முறையில் விளங்கவேண்டும் என்ற சிந்தனையில் இஸ்லாத்தை அணுகுங்கள். இல்லையேல் உங்களின் இம்முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கலும்தான் மிஞ்சும்.

நபி (ஸல்) அவர்கள் பற்றி மக்கா நகர் குறைஷிகள்

இந்தியாவில் வாழும் இந்து மக்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஜாதியப் பிரிவுகளால், வர்ணாசிரமத் தத்துவம் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியால் பிரித்துள்ள பிராமணர்கள் என்ற சிறு கூட்டம், எவ்வாறு தனது சுயநல கௌரவ சுகபோகங்களை அதன்மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால் அந்த அரபுப் பிரதேசத்திலும் ஜாதிய கட்டமைப்புகளால் தலைவர்களாக சிலர் அம்மக்களை ஆட்டிப்படைத்தனர்.

காட்டுமிராண்டி சமுதாயமாக வாழ்ந்த அந்த அரபுப் பிரதேசத்தில், முஹம்மது (ஸல்) அவர்களின் 40 வது வயதில் இஸ்லாம் என்னும் இப்பூரண ஜோதியை அல்லாஹ் அருளினான். இஸ்லாம் தனது குலப்பெருமையையும் இனவேற்றுமையையும் வேறோடு சாய்க்கிறது என்பதை அறிந்த அன்றைய அரபுப் பிரதேசத்தின் தாருந்நத்வா அறிஞர்கள் இஸ்லாத்தை எதிர்த்தனர். இருப்பினும் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நம்பிக்கைத் தன்மையில் எந்த சந்தேகத்தையும் கிளப்பவில்லை. இறை மறுப்பிலிருந்த அன்றைய சாதாரண மக்கள் முதல் அபூஜஹ்ல் தலைமையில் அமைந்த அந்த தாருந்நத்வா அறிஞர்கள் வரை முஹம்மது (ஸல்) அவர்களை ஸாதிக் – உண்மையார், வஃத் – வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், அமீன் – நம்பிக்கைக்குறியவர் என்றே அழைத்து மகிழ்ந்தனர். எந்த அளவிற்கெனில் அவர்கள் தங்களின் தீனார் திர்ஹங்கள் மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாக முஹம்மது (ஸல்) அவர்களை பாவித்தனர். அவர்களின் நேர்மை நாணயத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு உதாரணத்திற்காக வரலாற்றிலிருந்து இரண்டு விஷயங்கள்.

1. நபித்துவத்தின் ஆரம்ப நாட்களில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எத்திவைப்பதற்காக மக்கா குறைஷித் தலைவர்களை அழைத்து ஓரிடத்தில் ஒன்று கூட்டினார்கள். பிறகு அவ்விடத்திலிருந்த சிறு மலையைக் காண்பித்து ‘இம்மலைக் குன்றிற்குப் பின்னால் ஒரு கூட்டம் உங்களை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நீங்கள் என்னை நம்புவீர்களா’ என்று அக்குறைஷிகளிடம் வினவுகிறார்கள். அதற்கு ஒட்டுமொத்தமாக அந்த குறைஷிகள் ‘முஹம்மதே (ஸல்) நீங்கள் அப்படி சொன்னால் நிச்சயமாக நாங்கள் நம்பியே தீருவோம். ஏனெனில் நீங்கள் ஸாதிக்குல் வஃதில் அமீனாக இருக்கிறீர்கள். அதாவது எங்களில் பொய்யுரைக்காத உண்மையாhளராக, வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராக, எங்களில் நம்பிக்கைக்குறியவராக இருக்கிறீர்கள்’ என்று விடைபகர்ந்தனர்.

2. மற்றொரு சம்பவம், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன் இறை இல்லமாம் கஃபா குறைஷிகளால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. சுவனத்தின் அத்தாட்சிகளில் ஒன்றான ஹஜரல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை கஃபாவில் நிறுவுவதில் அக்குறைஷித் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடியாமல் விழித்த அந்நேரத்தில் குறைஷிகள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். அதாவது மறுநாள் காலையில் கஃபாவின் வாசல் வழியாக யார் முதலில் நுழைகிறாரோ அவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. அக்காலை அவர்கள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நுழையவே அக்குறைஷிகள் அனைவரும் நம்மிடையே தீர்பளிக்க சரியான ஆள்தான் கிடைத்திருக்கிறார் என்று பெருமிதம் கொண்டனர். நம்மிடையே இந்த முஹம்மது (ஸல்) நீதமாகவே நடந்து கொள்வார். நாம் இவரை அநியாயம் செய்பவராகவோ அநீதி இழைப்பவராகவோ காணவில்லை என ஒவ்வொரு கோத்திரத்தவரும் தீர்ப்பளிப்பதற்கு முஹம்மது (ஸல்) அவர்களை நிபந்தனையின்றி ஆமோதித்தனர். முஹம்மது (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் போர்வை ஒன்றை கொண்டுவரச் சொல்லி அக்கல்லை அப்போர்வையின் மீது வைத்து, போர்வையின் ஒவ்வொரு முனையையும் ஓவ்வொரு குறைஷித்தலைவரையும் பிடிக்கவைத்து அந்த கல் கஃபாவில் நிறுவப்பட்டது. குறைஷிகளின் அப்பிரச்சனை முடிந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குறைஷிகள் எதிர்பார்த்த வாயிலினுல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் நபராக அன்று நுழைந்திருந்தாலும், இவர்கள் கூறுவது போல பெரும் பொய்யராக இருந்திருந்தால் இதைச் சொல்லியே நபிகளை அவர்கள் புறக்கணித்திருக்க முடியும். இவர்கள் புளுகுவதைப் போல முஹம்மது (ஸல்) அவர்கள் தனிமனித வாழ்வில் பொய்யராக இருந்திருந்தால் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீதி சொல்பவராக முஹம்மது (ஸல்) அவர்களை குறைஷிகள் நியமித்திருப்பார்களா? தங்களின் விலைமதிப்பற்ற பொருட்களை அவர்களை நம்பி ஒப்படைத் திருப்பார்களா? உண்மையார், வாக்குறுதிக்கு மாறுசெய்யாதவர், நம்பிக்கைக்குரியவர் என்று அவர்களுக்குப் பட்டப் பெயர் சூட்டியிருப்பார்களா? ‘முஹம்மது ஒரு பொய்யன்’ என்று ஒரு தலைப்பிட்டு கட்டுரை வடித்த மகானுக்கு இந்த சிந்தனை கூடவா இல்லை?

இஸ்லாமிய வரலாற்றை அறிந்த யாருவரும் இவைகளை நன்கு அறிவார்கள் என்றாலும் இச்சரித்திரங்கள் ஏன் இங்கு நினைவூட்டப்படுகிறது எனில் இவர்களைவிட இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கருவறுக்கத் துணிந்த அந்த குறைஷிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எந்தக்குறையையும் காணவில்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்களோடு வாழ்ந்த அக்குறைஷிகள் நுபூவத்திற்கு முன்னரும் பின்னரும் தனிமனித வாழ்வில் நபி முஹம்மது (ஸல்) அவர்களை உண்மையாளராகவும் வாக்குறுதிக்கு என்றும் மாறுசெய்யாதவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவுமே சான்று பகர்வதைக் காண்கிறோம்.

இஸ்லாத்தின் கோட்பாடான ‘வணங்கத் தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே’ என்ற பேருண்மையை ஏற்றுக்கொண்டு விட்டால் அவர்கள் கற்பனையாக தெய்வங்கள் என்று காலங்காலமாக நம்பியவைகளை மறுக்க வேண்டி வரும் என்பதால் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அக்குறைஷிகள் எதிர்த்தனர். தங்கள் பதவி கௌரவம் பாதிக்கப்பட்டதினாலும், ஆண்டாள் அடிமை சாசனத்தை இஸ்லாம் கலைந்து அவர்கள் அச்சமுதாயத்தில் கட்டமைத்த ஜாதிய ஏற்றத்தாழ்வை உடைத்ததினாலும், நிறம் இனம் மொழி வேற்றுமைகளை வீழ்த்தி மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்களே என்பதை போதித்ததாலும் மட்டுமே முஹம்மது (ஸல்) அவர்களை அக்குறைஷிகள் எதிர்த்தனர். இஸ்லாத்தின் அசுர வளர்ச்சி கண்டு பொறுக்காமல் தங்களால் இயன்ற அளவில் புழுதிகளை அள்ளித் தூற்றத் துவங்கினர்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையாளர்களுக்கெல்லாம் உண்மையாளர், உண்மை என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தியவர்கள், உண்மைக்கு ஓர் அழகிய முன்மாதிரி என்பதை திருக்குர்ஆன் அளிக்கும் சான்றுகள் மூலமும், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் நம்மால் மிகச்சுலபமாக நிறுவிட இயலும். எனினும் நபி (ஸல்) அவர்களை பொய்யர் என்று எழுதியிருக்கும் குறுமதி படைத்த, எதிலும் நம்பிக்கையற்ற, பொய்களிலும் புரட்டுகளிலும் புரண்டுவாழும் இப்பொய்யர்களுக்கு அந்த நல் உபதேசங்கள் மண்டையில் உறைக்கவா போகிறது? எனவே இஸ்லாத்தை இவர்களைவிட வலிமையாக எதிர்த்த இவர்களின் முன்னோர்களான அபூஜஹ்ல் வகையறாக்களிலிருந்தே முதலில் இங்கு நிறுவுகிறோம்.

சாட்டையடிகள் மேலும் தொடரும் இன்ஷா அல்லாஹ்…

இஸ்லாமிய இணையப் பேரவை எதற்காக?

ஆகஸ்ட் 24, 2007 by முஸ்லிம்

இஸ்லாமிய இணையப் பேரவை எதற்காக? 

            அளவில்லா அருளும் நிகரில்லா கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால்…

சாந்தியும் சமாதானமும் உலகத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் வழி நெறி பிறலாது தொடர்ந்தோர் மீதும் அந்த ஓரிறையின் பேரருள் என்றும் பொழியட்டுமாக! 

            இவ்வுலகம் வேகமாக இயங்குகிறது கணிணி மையத்தில்!

            இஸ்லாமிய சகோதரர்கள் இன்னுமிருக்கிறார்கள் அறியாமை கோழத்தில்!!

            அகிலனைத்தில் இருக்கும் அன்புச் சகோதரர்களே கண் விழியுங்கள்!!!

            நாங்கள் சொல்வதை சிறிது செவிசாய்த்து கேளுங்கள் 

            இஸ்லாம் இருள் மையமாக்கப்படுகிறது இணையதளத்தில்

            இன்னுமா உறக்கம்? சகோதரா  எழுந்து வா இறைபயணத்தில் 

        இஸ்லாத்தை சிந்தனை ரீதியில் தாக்குதலை தொடுக்கிறது பாசிச சக்திகளின் பாசறை

            இதற்காக அறிவுபூர்வமாக விடை கொடுத்திட உதயமாகிறது இஸ்லாமிய இணையப் பேரவை

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - இது திருமறையின் போதனை

தீமையை தடுக்கக்கூடிய சக்தியிருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதற்கான பாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

என்று மார்க்கம் சொல்வதற்கினங்க இதை தாரகமந்திரமாக எடுத்துக்கொண்டு இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான  நச்சு கருத்துக்களுக்கு சத்தியத்தை சாதூர்யமாக எடுத்துக்கூறவும் அறிவுபூர்வமாக விடை கொடுக்கவும் உதயமாகிறது நம் இஸ்லாமிய இணையப் பேரவை.

மார்க்கத்தை மாசுபடுத்த முயலும் இணையங்கள் பல. தங்கள் சிந்தனைக்கு தருகிறோம் அதிலே சில

அசத்தியத்தில் இருப்போரோ அணி திரண்டு ஒன்றாகிவிட்டனர்.

சத்தியத்தில் இருப்போரோ சண்டையிட்டு பிரிந்துகிடக்கின்றனர்.

அப்போது ஆங்கிலத்தில் தான் தாக்குதலைத் தொடுத்தார்கள் அந்த ஆதிக்கச்சக்திகள்.

தற்போது தமிழிலும் தாக்க வந்துவிட்டார்கள் இந்த தறுதலைகள்.

குர்ஆனிய வசனங்களை குளறுபடியாக்கி குற்றம் புரிகின்றனர்.

நபிமொழிகளை நாசவேளை செய்து நக்கல் செய்கின்றனர்.

ஜிகாத் வசனங்களை தவறாக சித்தரித்து தவகல் தருகின்றனர்.

தற்காப்புக்கு செய்த போர்களை தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த தன்னறிவில்லாதவர்கள்.

பாகப்பிரிவினையை பலவாராக பிரித்து இஸ்லாத்தில் ஆனாதிக்கம் என்று தூற்றப்படுகிறது.

மார்க்கம் வாய்மையால் வளர்க்கப்பட்டதல்ல அது வாளால் பரப்பப்பட்டது என்று விதண்டாவாதம் புரிகின்றனர்.

நபியவர்களின் பலதாரமணத்தை பழித்துபேசி தவறான பட்டம் கொடுக்கப்படுகிறது. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் இளவயது திருமணத்தை இழிவாக பேசப்படுகிறது.

பல புனைப்பெயர்களால் முஸ்லிம் பெயர் வடிவம் கொடுத்து சில கட்டுரைகள் காட்டப்படுகிறது. அதற்கு நான் ஏன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினேன்என்று சுயவிளக்கமும் கொடுக்கப்படுகிறது

முஸ்லிம் குடும்பங்களில் தகாத உறவு நடப்பதுபோன்று கதைகள் வடிக்கப்படுகிறது. அதை சில இளம்வயது முஸ்லிம் சகோதிரி எழுதுவது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.

அழைப்புப்பணியில் அன்றாடம் தங்களை அறவழியில் அற்பணித்து கொண்டியிருக்கிறார்கள் நம் இந்திய திருநாட்டில் பலர்.

அப்பணியை அமுக்கிட அதை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி உளவுதுறைக்கு கொடுக்கின்றனர் சில தவறான தகவல்களை பாசிசத்தின் சிலர்

இறைச்சட்டங்களை இழிநிலை ஏற்படுத்தி ஏளனம் புரிகின்றனர் இணையதளத்தில்

நபியவர்களுக்கு உருவம்கொடுத்து  கற்பணை செய்கின்றனர் காமக்கண்ணோட்டத்தில்

உன் கண்ணுக்கு முன்னால் தீமை நடந்தால் என்ன செய்ய சொல்கிறது நபிமொழி?

ஆனால் நாம் அதை சிறிதும் கண்டும்காணாமல் இருக்கிறோம் தொழிலே, வீடே கதி!

இஸ்லாத்திற்கு இணையதளத்தில் களங்கம் ஏற்படுகிறது பல பாசிச சக்திகளால்

இஸ்லாமிய சகோதரர்களோ இணையாமலிருக்கிறார்கள் சில இயக்க தயக்கங்களால்

இஸ்லாத்தை இணையத்தில் தேடும்போது பாசிசத்தின் பக்கங்களே முதலில் வருகிறது

நாளைய தலைமுறைக்கு இணையத்தால் இஸ்லாம் தவறான முறையில் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது

இறைவன் அமானத்தாக கொடுக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாத்தை தூய வடிவில் கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது

முஸ்லீம்களால் இப்பேரவை நிறுவுவதற்கு இத்தீயசக்திகளால் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

            நிச்சயமாக புகழனைத்தும் இறைவனுக்கு

            நல்லாதரவு நல்குவீர் இந்த இஸ்லாமிய இணையப் பேரவைக்கு

            யா இறைவா! தூய எண்ணம் தந்து வெற்றியை கொடுப்பாயாக எமது முயற்சிக்கு.

Hello world!

ஜூலை 11, 2007 by முஸ்லிம்

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!